Kaatre En Vaasal Vanthaai – Lyrics (Rytham) Tamil

Kaatre En Vasal song lyrics from Rhythm (2000) composed by AR Rahman and written by Vairamuthu. Kaatre En Vasal is sung by Unni Krishnan, Kavita Krishnamurthy

LYRICS IN TAMIL

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றே
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
ச்வாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றே
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம் மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவண நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொல்லச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதரிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிளிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக …
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

Share with:

About the Author

Giri Prabhu
Column Writer