AR Murugadoss

Director AR Murugadoss – written by வெங்கடேஷ்
Director AR Murugadoss at Tupaki Telugu Movie Shooting Spot Stil
தமிழ் சினிமா முன்னனி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஏ.ஆர்.முருகதாஸ்(முருகதாஸ் ஆறுமுகம்) கள்ளக்குறிச்சில் 27/04/1974
ஆண்டு பிறந்தார்(வயது 40) . பள்ளி பயிலும் வயதிலேயே கவிதை மற்றும்
சிறுகதை எழுதும் ஆற்றல் பெற்றவர் . அதனால் அவர் தந்தை அவரை அவர் போக்கில்
விட்டு , அவரை உக்கவித்தார் .பின்பு திருச்சியில் உள்ள பிஷ்கோப் ஹேபர்
கல்லூாியில் பி.ஏ பயின்று பட்டம் பெற்றார் . கல்லூரி பயிலும் போது ,அவர்
அனைத்து கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்பார். கல்லூரி முடித்த பிறகு , அவர்
தந்தை அவர் எழுதிய சிறுகதைகளை எல்லாம் எடுத்து தன் மகனுக்குகாக உதவி
இயக்குனர் வாய்ப்பு கேட்டு அலைந்தார் . ஒரு வழியாக இயக்குனர்
எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனர் ஆனார் முருகதாஸ்.
எஸ்.ஜே.சூர்யாவிடம் ‘வாலி’,’குஷு’ போன்ற படங்களில் உதவி
இயக்குனராக பனியாற்றினார்,முருகதாஸ்.அந்த சமயம் நடிகர் அஜித்குமார் ,
முருகதாஸை பார்த்து பிற்காலத்தில் அவர் ஒரு பெரிய இயக்குனர் ஆவார் என்று
கூறி அவரை இயக்குனராக வாய்ப்பு கொடுத்து அவரின் முதற்படத்தில் நடித்தார்
அஜித். அவர்கள் இருவர் கூட்டனியில் உருவான படம் தான் ‘தீனா'(2001)
தீனாவை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் வெளிவந்த படம்
‘ரமணா'(2002) இதில் விஜயகாந்த் ,சிம்ரன் மற்றும் பலர் நடித்திருப்பார்கள்
. இப்படம் மாபெரும் வெற்றயடைந்ததையும் தாண்டி முருகதாஸுக்கு நல்ல
பெயரையும் பெற்றுக்கொடுத்தது . இப்படம் தெழுங்கு , கன்னடம்,பெங்காலி,
மற்றும் இந்தில் ரீமேக் செய்யப்பட்டது.இப்படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸ்
சிறந்த வசன்ததிற்கான மாநில விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு சூர்யாவுடன் இணைந்த படம்
தான் ‘கஜினி'(2005) வசூலில் சக்கை போடு போட்ட படம் , இப்படம் பல
பிலிம்பேர் விருதுகளையும் , மாநில விருதுகளையும் பெற்றது ,இப்படம்
சூரியாவிற்கு நல்ல இமேஜை கொடுத்தது . அத்தோடு இப்படத்தை இந்தியிலும்
ரீமேக் செய்து மாபெறும் வெற்றி கண்டார் , முருகதாஸ் . இது அவருக்கு முதல்
இந்தி திரைப்படம் .இதில் பாலிவுட் ஸடார் ஆமீர் கான் மற்றும் அசின்
நடித்திருந்தனர் , இப்படம் 100 கோடு வசூல் செய்தது .

கஜினிக்குப் பிறகு முருகதாஸ் தெழுங்கு துறையில் ‘ஸ்டாலின்'(2007)
திரைப்படம் மூலம் கால் பதித்தார் . இதில் தெழுங்கு சூப்பர் ஸ்டார்
சிரஞ்சீவி மற்றும் திரிஷா நடித்திருந்தனர் .இப்படம் தோல்வியை அடைய
நேர்ந்தது .

பின்பு மீண்டும் சூர்யாவிடம் இணைந்து ‘ஏழாம் அறிவு'(2011) என்ற உலக தரமான
படத்தை இயக்கினார் . இதில் ‘போதிதர்மர்’ என்ற பல்லவ மன்னனை உலகிற்கு
அடையாளப்படுத்தினார் . இப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது
குறிப்பிடதக்கது. இப்படத்தை தமிழர்களுக்கு
சமர்ப்பித்தார்,ஏ.ஆர்.முருகதாஸ் .

ஏழாம் அறிவு வெற்றியை தொடர்ந்து, ‘இளைய தளபதி’ விஜய்யுடன் இணைந்து
‘துப்பாக்கி'(2012)என்ற சூப்பர் ஹுட் படத்தை தந்தார் ,ஏ.ஆர்.முருகதாஸ்.
இப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது.இப்படத்தை இராணுவ
வீரர்களுக்கு சமர்ப்பித்தார்

பின்பு துப்பாக்கி படத்தை இந்தியில்,அக்ஷய் குமார்,சோனக்ஷி சின்ஹாவை
வைத்து ரீமேக் செய்தார் அந்த படம் ‘ஹாலிடே'(2014) இந்த படமும்
வெற்றிபெற்றது.

பின்பு விஜய்யுடன் மீண்டும் இணைந்து பல பிரச்சனைகளையும் தாண்டி
‘கத்தி'(2014) என்ற மாபெறும் வெற்றிப்படத்தை தந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

தற்போது அவர் இந்தி படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் .

பின்குறிப்பு – ♦ஏ.ஆர்.முருகதாஸ் புதுமுக நடிகர்களை இயக்கியதே இல்லை.

♦விஜய் ,அஜித், சூரியா ,
ஆமீர்கான் , சிரஞ்சீவி, விஜயகாந்த் , அக்ஷய்குமார் போன்ற பெரிய
நடிகர்களை மட்மே இயக்கியுள்ளார்.

♦தீனா படம் வெளிவரும் முன்பே ஏ.ஆர்.முருகதாஸின் தந்தை இறந்து விட்டார்
என்பது குறிப்பிடதக்கது.

♦தீனா படம் தான் அஜிதிற்கு ‘தல’ என்ற பெயரை கொடுத்து

♦’பாலிவுட் பாட்ஷா’ ஷாருக் கான் ஒருமுறை முருகதாஸை ‘சின்ன மணிரத்னம்’ என
புகழ்ந்துள்ளார்

error20