என் பார்வையில் தர்மதுரை (Movie)

இந்த படத்தை நேத்து தான் பாத்தேன் விஜய்சேதுபதியை படம் தொடக்கத்துல பாத்ததுமே வழக்கமான கெட்டப்பல தான் நடிச்சதா தோணுச்சு, படம் கொஞ்சம் போன அப்புறம் அவர் டாக்டர் தெளிவான கேரக்டர். சாந்தமா முகத்தை வெச்சிண்டு இவர இந்த படத்துல பாத்ததுமே புடிக்காதவங்களுக்கு கூட புடிச்சுடும் அப்படி இருந்துட்டு இவரு கேரக்டர் இதுல.

திரு ராஜேஷ் சார் எச்.ஓ.டி கேரக்டரில செம்ம  ..நம்ம நாட்ல மருத்துவம் படிச்சிட்டு வெளிநாட்ல சம்பாதிக்க போகுறவாளுக்கு இது சரியான செருப்படி படம். இந்த படிப்பை சேவையா நினைக்கனுமே தவிர காசு சம்பாதிக்குற தொழிலா நினைக்க கூடாதுனு  படமாக்கி இருக்காங்க

இந்த படத்துல அழ வெக்குற நட்பையும் அழகா காமிச்சி இருக்காங்க! அதே சமயத்துல அழகான காதலையும் அழ வெச்சியும் காமிச்சிட்டாங்க!

ராதிகா மேடம் எப்பவும் போலவே அம்மா கேரடர்ல கலக்கிட்டாங்க. தமன்னா அவங்க முதல் படத்துல பாத்த மாதிரியே இருந்துச்சி, ரொம்ப யங்கா தெரிஞ்சாங்க இதுல

அடுத்ததா ஐஸு ச்சா…போ பின்னிடாங்க. வந்த சீன்ஸ் கொஞ்சமா இருந்தாலும் எப்பவும் போலயே  யதார்த்தமா நடிச்சி கைதட்ட வெச்சுட்டாங்க. ஆன்டிபட்டி கனவா சாங்க்ஸ் அடிக்கடி கேட்குற மாதிரி இருக்கு. கிராம பக்கம் திரும்ப வெச்சிட்டு இந்த படம். போய் பாருங்க எனக்கு புடிச்ச மாதிரி உங்களுக்கும் புடிக்கும்.

[tweetthis remove_twitter_handles=”true”]என் பார்வையில் தர்மதுரை (Movie) -@natpu_sundari ->[/tweetthis]

20

You may also like...

Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *

Enjoyed this blog? FOLLOW US