Dialogues, Songs and Lyrics of Kochadaiiyaan

Plumeria Movies (2)

‘பல நூற்றாண்டுகள்க்கு முன்பு பாரத தேசத்தின் தென்பகுதியில் பலம்பெற்று விளங்கிய இரு ராஜ்ஜியங்கள்… கொட்டைபட்டிணவும் கலிங்கபுரியும்…’ Movie starts with AR Rahman’s crystal clear narration… and there begins the epic 3D Indian movie. This is not a movie which will be remembered for its VFX or as a great film but will be forever remembered as India’s first photo-realistic performance capture film, as one of the biggest risky attempt. Whatever said about the quality of CGI, Kochadaiiyaan is a giant step in Indian filmmaking, and this is something that deserves support and appreciation.

The movie have some powerful dialogues.

Rajinikanth in Kochadaiyaan _ Super Star _ Plumeria Movies (5)

Eg.:

‘நடப்பை விட நாடு தானே முக்கியம்’
‘சிறு சிறு கொட்டைகளை வென்றது பெரிதல்ல, கொட்டைபட்டிணத்தை வெல்ல வேண்டும்’
தெளிவுரையும் முடிவுரையும் தெளிந்த நீரோடையாக தெரிந்த பிறகு முன்னரை எதற்கு உனக்கு!’
‘வாய்ப்புகள் அமையாது நாம்தான் அமைத்து கொள்ள வேண்டும்’
‘அதே ரத்தம்… அப்பிடித்தான் இருக்கும்’
வெறும் மண்ணை ஆளுபவன் மன்னன் அல்ல, மண்ணில் வாழும் மக்களின் மனதை ஆளுபவன் தான் மன்னன்.’
‘மேடை போட்டு ஆறம்பித்து வைத்தவர் நீங்கள், கீழே இருந்து முடிக்கபோறிவன் நான்.’
‘பார்த்தாயா …. எங்கள் நாட்டின் ரத கஜ துரக பதாதிகளை’

Rajinikanth in Kochadaiyaan _ Super Star _ Plumeria Movies (3)

… and some inspiring and soul touching, lyrics and music,

‘உங்களின் வாழ்த்துக்களால்
உயிர் கொண்டு எழுந்துவிட்டேன்,
வாழ்த்திய மனங்களுக்கு
என் வாழ்க்கையே வழங்கி விட்டேன்’

‘ஆகாயம் தடுத்தாலும் பாயும் பறவையாவோம்!
மாமலைகள் தடுத்தால் தாவும் மேகமாவோம்!
காடு தடுத்தால் காற்றாய் போவாம்!
கடலே தடுத்தால் மீன்கள் ஆவோம்!’

The soundtrack and background score of the film, composed by A.R. Rahman is out of the world. Greatness at its peak.

‘ஆகாய மேகங்கள் பொழியும்போது
ஆதாயம் கேளாது
தாய் நாடு தாக்கின்ற உள்ளம் என்றும்
தனக்காக வாழாது’

Rajinikanth _ Indian Super Star _ Plumeria Movies (4)

Complete Lyrics – Enge Pogutho Vaanam

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்….
எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்….
வாழ்வில் மீண்டாய்,
வையம் வென்றாய்,
எல்லை உனக்கில்லை தலைவா….
காற்றின் பாடல்கள்
என்றுமே தீராது.
வெற்றிச் சங்கொலி
என்றுமே ஓயாது ஓயாது….
ஹே… உனது வாளால்
ஒரு சூரியனை உண்டாக்கு
ஹே… எனது தோழா
நம் தாய்நாட்டை பொன்னாக்கு
ஆகாயம் தடுத்தாலும்
பாயும் பறவையாவோம் !
மாமலைகள் தடுத்தால்
தாவும் மேகமாவோம் !
காடு தடுத்தால்
காற்றாய் போவாம் !
கடலே தடுத்தால்
மீன்கள் ஆவோம் !
வீரா – வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்.
வெற்றி உன்னை வந்து கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்.
லட்சியம் என்பதெல்லாம் வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம் வாள் கண்டு பிறப்பதடா
எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்….
வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா….
எந்தன் வில்லும்
சொல்லிய சொல்லும் – எந்த
நாளும் பொய்த்ததில்லை
இளைய சிங்கமே
எழுந்து போராடு போராடு….
வீரா – வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்
உங்களின் வாழ்த்துக்களால்
உயிர்க் கொண்டு எழுந்துவிட்டேன்
வாழ்த்திய மனங்களுக்கு என்
வாழ்க்கையை வழங்கி விட்டேன்
ஹே… உனது வாளால்
ஒரு சூரியனை உண்டாக்கு
ஹே… எனது தோழா
நம் தாய்நாட்டை பொன்னாக்கு
எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்….
வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா….
காற்றின் பாடல்கள் என்றுமே தீராது
வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது ஓயாது….
Rajinikanth in Kochadaiyaan _ Super Star _ Plumeria Movies (7)
Complete Lyrics: Maattram Ondru Thaan Maaraathathu
Rajini:
எதிரிகளை ஒழிக்க
எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி
மன்னிப்பு

உண்மை உருவாய் நீ

உலகின் குருவாய் நீ
எம்முன் வருவாய் நீ
இன்மொழி அருள்வாய் நீ

உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்மாற்றம் ஒன்றுதான் மாறாததுரஜினி:
மாறு
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு
பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது

பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது

சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனையே ஜெயிப்பாய்
நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை – செயல்

உடலா உயிரா பெயரா நீ ?
மூன்றும் இல்லை செயலே நீ
விதியை அமைப்பது இறைவன் கையில்
அந்த விதியை முடிப்பது உந்தன் கையில்

உன் வில்லோடு வில்லோடு வீரம் கொடு
உன் சொல்லோடு சொல்லோடு மாற்றம் கொடுமாற்றம் ஒன்று தான் மாறாதது

ரஜினி:
நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்
பெற்றோர்கள் அமைவது விதி;
நண்பர்களை அமைப்பது மதி

சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்

நண்பா.. எல்லாம் கொஞ்ச காலம்

உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்…!

மாற்றம் ஒன்றுதான் மாறாதது…

Combined by P.S. Arjun and R. Ramkumar

Share with: