படம் வந்ததும் இத பத்தி டிவிட்ர்ல ஆஹா ஓஹா னு சொன்னத பாத்து தியேட்ர்ல போய் பாக்காம மிஸ் பண்டேனே னு தோனுன படத்துல இதுவும் ஒண்ணு நல்ல வேளையா பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு ஜெயா டிவில இந்த படத்தை பாத்தேன்.
இந்த படத்துல நடிச்ச விஜய் சேதுபதி, பாபிசிம்கா, ராதாரவி, எஸ்.ஜே.சூரியா, அஞ்சலி இப்படி பல பேர் அவங்களுக்கனு கொடுத்த கேரக்டேர்ல பின்னிட்டாங்க குறிப்பா அந்த கிளப்ல ஒரஜினல டைரக்டர் குடிச்சிட்டு தான் எடுத்த படம் வெளியே வராத தனது பீலிங்க நல்லா வெளிபடுத்தி இருக்கிறார் எஸ் ஜே சூரியா.
இறைவி னா கோயில் சிலை னு இந்த படம் மூலமா தான் நான் தெிரிஞ்சுகிட்டேன். பெண்களை ஆண்கள் சரியா கவனிக்காம அவங்க சுய கோபத்தினால தன்னை நம்பி வந்த பெண்னை கைவிட்ராங்க னு இந்த படம் நகருது.
பாபிசிம்கா முடியாத நிலையில படுத்துண்டு இருக்குற தன் அம்மா கிட்டா சொல்றாரு இந்த ஆம்பளைங்க பெண்களை ஏமாத்துறாங்க சரியா பாக்காம கை விட்ராங்கனு சொல்லிட்டு அடுத்தவ பெண்டாட்டிமேல கருசனம் காட்றதும் அவளை லவ் பண்றதும் சரியா? இவரு நல்ல ஆண் தான் னு இருந்தா யாராவது ஒரு பெண்னை லவ் பண்ணி அவளை நல்ல படி வாழ வெச்சு இவரு நல்ல ஆண் னு ப்ருவ் பண்ணி இருக்கலாம்ல
பெண்கள நல்ல விதமா காட்றேனு படம் பண்டு அவள வேசி தனமா காமிக்கிறது அத வேற சரிதானு காமிக்க முயற்சி பண்றது
அத விட கொடுமை க்ளைமாக்ஸ் ல எஸ் ஜே சூரியா சொல்ற டைலக் கொலை பண்டு கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கலாமே னு கேட்டதுக்கு “பொறுமையா இருக்க நான் பொம்பல இல்ல ஆம்பள னு சொல்றது”
நல்ல படம் எடுக்குறோம்னு நினைச்சி எடுக்குறதெல்லாம் நல்ல படமா ஆயிடாது. ஒரு பெண்ணா இந்த படம் எனக்குள் ஏற்படுத்திய கருத்துகளை தான் இங்க வெளிபடுத்தி இருக்கிறேன்.
[tweetthis twitter_handles=”@natpu_sundari”]டிவில பாத்த இறைவி #Iraivi[/tweetthis]
Writer
Be the first to comment on "டிவில பாத்த இறைவி #Iraivi"