ஹவ் டூ கெட் வேர்ல்டு சினிமா ஃபீல்!

ஹவ் டூ கெட் வேர்ல்டு சினிமா ஃபீல் – by Sivakumar Kanagaraj

  1. கட் தி சாங்ஸ்: பாட்டக் கட் பண்ணாவே அது உலக சினிமதான்னு பாதிப் பேரு ஒத்துக்குவாய்ங்க, ஒருவேள படம் ஓடலைனாலும்  நாம வசதியா மக்களத் திட்டலாம், இந்தக் கேடு கெட்ட கூட்டம் இன்னும் வளரல உங்களுக்குப் போய் உலகத் தரத்த காமிக்க முயற்சி பண்ணது என் தப்புன்னு மேடைக்கு மேட கழுவி ஊத்தலாம், அட்லீஸ்ட் மீடியாவாச்சும் நம்மள உத்து கவனிப்பாய்ங்க. உகாண்டா நாட்டு இயக்குனர் டிங்கர் புஷ்கின் அப்டிங்கற உலகப் பட இயக்குனர் இந்த மெத்தெட் தான் ஃபாலோ பண்றார்.Inside The Article
  2. நல்ல கலைக்கு நாலு கொல: ஒரு நல்ல கலை வெளிய வரணும்னா அதுல ஒரு ரியலிஸம் இருக்கணும், அப்டியே உண்மை ஒழுகி ஓடணும், இப்டிதான் ஈரானிய டைரக்டர் கோலா அப்டிங்கறவர் அவரோட படத்துல ஒரு தற்கொலை சீனுக்காக நாலு பேர்த்த உண்மைலயே தூக்குல தொங்கவிட்டார், அப்படி ஒரு ரியல் சீன். நாக்கு வெளிய தள்ளும்போது மக்கள்லாம் சிலிர்த்துட்டாங்க, இங்கயும் அத முயற்சி பண்ணனும் இந்த ஹீரோ ஃப்ரெண்டு ரோலு அமெரிக்க மாப்பிள்ளை ரோலெல்லாம் பண்ணாம ஸ்ட்ரைட்டா ஹீரோன்னு சொல்றான்ய்ங்க பாருங்க அவிங்களயெல்லாம் கூட்டியாந்து வெஷத்தக் குடுத்து கொண்டு புடணும். புகழ் பெற்ற நடிகர் அட்லீ கூட இத பண்ணிருக்காராம், ஒழுங்கா நடிக்காதவன், பேட்டா அதிகமா கேட்டவனையெல்லாம் கவட்டக்கி நடுவுல நச்சுனு எத்துவாராம், ராங் காமிச்ச பார்டிக பொட்டுனு உழுந்து பட்டுனு போயிருவாங்களாம். அதாவது கலைனா நாலு கொல விழத்தான் செய்யும்.
  3. இருட்டு: இதுவும் ரொம்ப பேஸிக்கான விஷயம் இன்டெலிஜெண்ட் சினிமான்னா அது இருட்டுக்குள்ள தான் நடக்கும், அதாவது வசனமெல்லாம் நல்லா கேக்கும் ஆனா ஸ்க்ரீன்ல என்ன நடக்குதுன்னு நீயே ஒரு குத்துமதிப்பா புரிஞ்சுக்கணும், வியூவர்ஸோட புத்திசாலித்தனத்த நூறு சதவீதம் அங்கீகரிப்பதன் குறியீடு அது. போலந்தின் உலகப் புகழ் பெற்ற இயக்குனர் மேனி ரூத்னம் இத முழுமையா செய்வார், கண்ணாடி குடுத்து தாட்டி உட்றானுகள்ல இப்போ வந்திருக்க 3 டி டெக்னாலஜிக்கு, அதே மாதிரி இவரோட படங்களுக்கு கைல டார்ச் லைட் குடுத்து தியேட்டர் உள்ள அனுப்புவானுக, ரொம்ப இருட்டா இருக்க சீனுக்கு நீங்க இப்போ டார்ச் ஆன் செய்யவும்னு படத்துலயே கீழ எழுத்து காமிக்கும்.

Share with:


Newsletter