ரஜினி சார் நடிச்ச படதுல கபாலில தான் அவருடைய வயசுக்கு தகுந்த மாதிரி நடிச்சிருக்கிறார். சண்ட சீன் ஆகட்டும் டான்ஸ் ஆகட்டும் ஆகட்டும் அவரது வயதுக்கு ஏத்தபோலவே அமைச்சி இருக்கிறது தான் இந்த படத்தோட ஸ்பஷல் னு நான் சொல்வேன்.
குறிப்பா அவரது மேக்கப் ப்ப்ப்பாாா… சும்மா அவர அந்த தாடியோட படத்துல பாத்தாலே ரியலி “நெருப்புடா” னே சொல்ல வெக்குது.
சாங்ஸ் எல்லாம் முதல்ல படம் ரிலிஸுக்கு முன்னாடி கேட்டத விட படத்தோட பாக்கும் போது செம்ம கானா பாலா டிவ்ரன்ட் வாய்ஸ்ல மாத்தி பாடிய இரண்டு பாட்டு சூப்பர், தீம் மியூசிக் அடிச்சிக்க முடியாது.
தமிழனி்ன் திறமையை இந்த படம் தெளிவா காட்டிச்சி… அப்பா பொண்ணு சீனு, மனைவி மீதான காதல் அவளை காண வேண்டி பட்ட மன போராட்டம் இப்படி பல பிளஸ்.
திரைகதை சீன்ஸ் கொஞ்சம் மெதுவா நகர்ந்து போனாலும் மனதுல பல சீன்ஸ் நிக்க வெக்குது நெருப்புடா னு சொல்ல வெக்குது.
க்ளைமஸ் சீன்ல ரஜினி சார் பேசுற வசனம் ப்ப்ப்ப்பாாா! ‘ஏன்டா? இந்த தமிழனுக எப்பவுமே அடிமையா தான் இருக்கனுமா? அவன் முன்னுக்கு வரவே கூடாதா அப்படியே எவனாவது முன்னுக்கு வந்துட்டா நல்ல பவர்ல இருந்துட்டா கோட்டு சூட்டு போட்டா உங்க முன்னாடி கால் மேல கால போட்டு உக்காந்துட்டா உங்களால பொறுத்துக்க முடியாதுல! நான் முன்னுக்கு வருது தான் உங்க பிரச்சனைனா நான் முன்னுக்கு வருவேன்டா, கோட் சூட்டு போடுவேண்டா!
அந்த வசனம் கேட்டதுமே உடம்புல நான் ஒரு தமிழ் னு ஒரு திமிரு வந்து தியேட்ர்ல கார்னர் சீட்டுக்கு வந்துட்டேன். கபாலி னு ஒரு ரஜினி படம் பார்க்க போனே ஒரு “தமிழன்” என்ற கர்வத்தோட வெளியே வந்தேன்.
இந்த படம் மூலமா நமக்கு அழகான வார்த்தை பேச கத்துக்கிட்டோம் ‘மகிழ்ச்சி’!
Writer
Be the first to comment on "Kabali Tamil Review – Magizhchi"