பாட்டில பல கோடி நெஞ்ச நானும் புடிச்சேன் – Rajinikanth Songs For You

ரஜினிகாந்த் அவர்கள் தான் நடித்த முதல் படத்தில் இருந்து இன்று வரை தன் தனி ஸ்டைல் மற்றும் தன் எளிமையான தோற்றத்தால் மக்களை கவர்ந்தவர்.

Rajinikanth in Baashaஅவரின் சில படங்களில் ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களின் வரிகளின் மூலமாக ஏழை தொழிலார்களையும் கவர்ந்து இருக்கிறார் சூப்பார்ஸ்டார். உழைப்பாளி படத்தில் கூலி தொழிலாளியாகவும், மன்னன் படத்தில் கம்பெனி தொழிலாளியாகவும், அண்ணாமலை யில் பால்காரர் ஆகவும், பாட்ஷா படத்தில் ஆட்டோக்காரர் ஆகவும்,படையப்பா படத்தில் கட்டுமான பொறியாளராகவும், போன்ற கதாபாத்திரங்கள் மூலம் உலக மக்களை கவர்ந்தவர். அவர் படங்களில் முதல் பாடல் தத்துவ பாடலாகவும், மக்களுக்கு கருத்துக்களை கொண்டு செல்லும் பாடலாக அமைத்தது.

அந்த பாடல்களில் சில, ஒரு ரசிகானாக உங்கள் பார்வைக்கு…

அண்ணாமலை: “வந்தேன்டா பால்காரன்” பாடலில் வரும் வைரமுத்துவின்  வரிகளில் தேவாவின் இசையில் வந்த தத்துவம் மக்களிடம் பரவாலாக பேசபட்ட ஒன்று..!
உழைப்பாளி: “உழைப்பாளி இல்லாத நாடுதான்” எங்கும் இல்லேயா பாடல் வாலியின் வரிகளில் இளையராஜாவின் இசை கூலி மக்களை கவரும் வகையில் இருக்கும். வரிகளில் உள்ள தத்துவம் ஏழை தொழிலாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும்.

“தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு
நீ தனி தனியா கோவில் கொலம் அலைவது எதுக்கு”

பாட்ஷா: “நான் ஆட்டோக்காரன்” என்ற முதல் பாடல் ஹீரோ இன்ரோடக்கசன் பாடலாகவும், ஆட்டோ ஒட்டுனர்களின் சிறப்பை எடுத்து சொல்லும் விதாமா இருக்கும்.. தேவாவின் அவர்களின் வேகமான இசையில்.. ஆட்டோக்காரர் ஓட்டுனர்களின் ஆயுதபூசை தீம் பாடல் இன்றும் ஒலித்து கொண்டு இருக்கிறது.

Rajinikanth

முத்து: “ஒருவன் ஒருவன் முதலாளி” என்ற பாடல் உனக்கு நீயே முதலாளி என்று சொல்லும் வகையில் பணம் அதிகம் இருந்தால் நீ பணத்திற்க்கு அடிமை என்பது போல் வரிகள் எழுதிஇருப்பார்
வைரமுத்து அவர்களின் வரிகள், இசைபுயல் ஏ. ஆர் ரகுமான் இசையில் வித்தியாசமான முதல் பாடல்.

சந்திரமுகி: “தேவுடா தேவுடா” பாடல் வரிகளில் முடி திருத்துபவர் மற்றும் துப்புரவு பணியாளர்களின் வேலையை உயவாக கூறி பாடுவது போல வரிகள் அமைத்திருப்பார் வாலி எழுத்தாளர். வித்தியாசாகரின் துள்ளலான இசையில்.

READ  Once Again Kabali Review - Magizhchi

“பொறுமை கொள்,
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்”

சிவாஜி: “பல்லேலக்கா” பாடலில் நம் தமிழ்நாடின் பெருமையையும் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களின் அழைகையும், உணவு பழக்கங்களையும் பற்றி படுவாது போன்று நா. முத்துக்குமார் அவர்கள் வரிகள் எழுதியிருப்பார். ஏ. ஆர் ரகுமான் இசையில்.

லிங்கா: “ஓ நண்பா” என்ற பாடல் மனிதர்களின் பேராசைகளை பற்றியும்,இன்ப துன்பங்களை பற்றியும் வரிகள் எழுதியிருப்பார் கவிஞர் வைரமுத்து. ஏ. ஆர் ரகுமான் இசையில்.

கபாலி: “உலகம் ஒருவனுக்கா” பாடல் அடிமை மக்களின் சுதந்திரத்தை பற்றியும், கபாலியின் மூலம் மக்களின்க ஷ்டங்களுக்கு இனி விடுதலை போன்ற வரிகள் எழுதியிருப்பார் கபிலன். சந்தோஷ் நாராயணன் இசையில்..

இப்டி பல பாடல்களின் வரிகளின் மூலமாகவும் ஏழை எளிய மக்களின் மனதில் ஸ்டாராக இருக்கிறார்!

 நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே
நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால்
உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட என்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்”

[tweetthis remove_twitter_handles=”true”]பாட்டில பல கோடி நெஞ்ச நானும் புடிச்சேன் – Rajinikanth Songs For You[/tweetthis]

20

You may also like...

Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *

Enjoyed this blog? FOLLOW US