சமுத்திரகனி சார் அவர்களின் படம் என்றாளே சமுதாயத்தில் நடக்கு கூடிய பிரச்சனைகளை படமா அமைத்திருப்பார் என்று தெரிந்தது. அதிலும் “அப்பா” என்ற டைட்டில்… அப்பா எனும் கதாபாத்திரம் நம் வாழக்கையில் வந்து போகும் முக்கியமான உறவாகும். சினிமாக்களில் பல படங்களில் அப்பா எனும் கதாபாத்திரம் தன் வாழ் நாளில் பிள்ளைகளை படிக்க வைத்து,வேலைக்கு அனுப்பி, கல்யாணம் பண்ணுவது போல தான் கதை பார்த்திருப்போம், இந்தபடத்தில் முற்றிலும் வேறாக திரைக்கதை அமைந்துள்ளார் இயக்குனர் சமுத்திரகனி அவர்கள்.. இந்த கதைக்கு இப்டி பெயர் வைத்தது அருமை.
இயக்குனர் சமுத்திரகனியாக மட்டும் அல்லாமல் தயா எனும் கதாபாத்திரம் மூலமாக இந்த படத்தை சமுதாய ரீதியாக கொண்டு சென்று இருக்கிறார். பெற்றோர்கள் தன் பிள்ளைகளை பிறப்பதற்கு முன்பும் பிறந்த பிறகும்,எப்டி பிள்ளைகளை இந்த சமுதாயத்திற்கு ஏற்றார் போல தயார் செய்து கொள்வது என்பதையும், தன் பிள்ளைகள் என்னவாக அசைப்படுகிறார்கள் என்பதையும், தன் பிள்ளை ஊனமாகவோ, மூளை வளர்ச்சி இல்லாமலோ பிறக்கும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை மட்டும் அல்லாமல் ஊக்கதையும் கொடுத்து வளர்க்க வேண்டும் என்பதையும் இந்த கதையின் மூலம் சொல்லியிருக்கிறார்.
பிள்ளைகளின் விருப்பம் அறிந்து பெற்றோர்கள் செயல் பட வேண்டும் என்று கதையில் தயாவின் மகனும், எப்படி வளர்க்க கூடாது என்பதற்காக தம்பிராமய்யாவின் மகனும், இந்த சமுதாயத்தில் என்ன பிரச்சனை நடந்தாலும் கண்டு கொள்ளாமல்,எதிர்து குரல் கொடுக்காமல் தன் வேலையை மட்டும் அமைதியாக பார்க்க வேண்டும் என்று சொல்லி பயமுறுத்தி தன் மகனை வளர்ப்பது போன்று காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர் சமுத்திரகனி..!
படத்தில் வரும் குழந்தைகளின் நடிப்பு அசரவைக்கிறது. இடைவேளை வரை காமெடி கலந்து திரைக்கதை அமைத்துள்ளது சிரப்பு, மழைலை கவிஞர் மயில் வாண்டு என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் இருக்கும் திறமையை பெற்றோர்கள் உதாசீனப்படுத்தாமல் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், வெற்றி என்ற கதாபாத்திரத்தின் மூலம் அப்பாவிடம் எந்த ஒளிவு மறைவும் இன்றி நட்பனை போல வெளிப்படையாக பேசி பழக வேண்டும் என்பதையும், சக்கரை என்ற கதாபாத்திரத்தின் மூலம் தன் பெற்றோர்களிடம் பயப்படாமல் தன் முடிவுகளை சொல்லவேண்டும் என்பதை அழகான திரைக்கதையின் மூலம் எல்லோர் மனதிலும் பதியும் விதம் எதார்த்தமாக சொல்லியிருக்கிரார், கிளைமாக்ஸ்ல் சிறப்பு தோற்றத்தில் வரும் சசி குமாரின் கதாபாத்திரத்தின் மூலம்-பெற்றோர்களின் வர்ப்புருத்தலால் 100% மதிப்பெண் பெற வேண்டும் என்று சேர்க்கப்படும் பள்ளிகளில், பணத்திற்காக சில தனியார் பள்ளிகளில் நடக்கும் கொடுமைகள் மற்றும் சராசரியாக படிக்கும் மாணவர்களின் பிரச்சனைகளை அந்த சக்கரை என்ற கதாபாத்திரத்தின் மூலம், தேர்வு முடிவினால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலத்தையும் அமைத்திருக்கும் காட்சிகளின் மூலம் கண்ணீர் வர வைத்துள்ளார் இயக்குனர்.
இந்த மாதிரி படங்கள் சமுதாயத்தில் வரவேற்க பட வேண்டிய ஒன்று..!
Writer
Be the first to comment on "Appa (Review): இந்த கதைக்கு இப்டி பெயர் வைத்தது அருமை"