Tamil Review of A Tale of Two Sisters (Korean)

எனக்கு பேய் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் நான் பேய் படத்தை என் தனி அறையில் ஹெட்போன்ல காதில் மாட்டி கொண்டு தான் பேய் (horror) படங்களை பார்ப்பேன் . அப்படி பார்க்கும்போது பேய் படங்களில் டக்னு ஒரு உருவம் வரும்போது ஒரு பயம் வரும் பாருங்க அது எனக்கு ரொம்ப பிடிக்கும் Ecstasy பீலிங் கொடுக்கும் அப்படியே என் இதயத்தின் பீட்களை நானே உணருவேன்…

இது ஒரு கொரியன் படம். கொரியாவில் இப்போது நல்ல தரமான படங்களை எடுக்கிறார்கள். இந்த படத்தின் கதையை சொல்கிறேன் ஒரு மருத்துவமனையில் ஒரு பெண் உட்கார்ந்து இருக்கிறாள். டாக்டர் ஒரு போட்டோவை காட்டி இவர்கள் யார் என்று தெரிகிறதா இது தான் உன் குடும்பம் தெரிகிறதா என்று கேட்கிறார் அவள் மௌனமாக இருக்கிறாள். பின்பு பிளாஷ்பாக்ல காட்சிகள் விரிகிறது. ஒரு விட்டிற்கு தன் தந்தையுடன் இரு பெண்கள் (அக்கா தங்கை) வருகிறார்கள். அந்த விட்டில் அவளின் சித்தி (தந்தையின் இரண்டாவது மனைவி) இருக்கிறாள். அவளுக்கு இவர்களை கண்டால் பிடிக்கவில்லை அவள் பேசுவதை காது கொடுத்து கேட்காமல் விட்டுக்குள் செல்கின்றனர். அன்று இரவு சாப்பிடம் போது சித்தி அவர் கணவரிடம் தன் தம்பியும் அவள் மனைவியும் உணவு அருந்த வருகிறார்கள் என்று சொல்கிறாள். இந்த பெண்களிடம் சொல்லும்போது அக்கா சாப்பிடாமல் எழுந்து விடுகிறாள். பின்னாலே தங்கையும் அவளுடன் சென்று விடுகிறாள்.

அன்று இரவு தங்கையின் அறையில் ஒரு காலடி சத்தம் கேட்கிறது.பின்னர் அவளின் அறை கதவு திறக்கப்படுகிறது… அவள் பயந்துபோய் தன் அக்காவின் அறைக்கு செல்கிறாள். அக்கா தான் இருக்கையில், அவள் எப்போதும் கவலைப்படக்கூடாதென்றும், அவளுடனேயே எப்பொழுதும் இருப்பதாகவும் சொல்லி, தங்கையை தூங்க வைக்கிறாள்.மறுநாள் காலை அக்கா ஒரு கெட்ட கனவை காண்கிறாள். அந்த கனவில் ஒரு உருவம் இவளை நோக்கி வருகிறது. அப்போ!!!!!

அடுத்த நாள் காலையில் அவள் தங்கைக்கு periods அதே நேரத்தில் அவர்களது சித்திக்கும் periods தொடங்குவது தெரிகிறது. அக்கா அவர்கள் விட்டில் இருக்கும் ஒரு பழைய அறையில் இவர்கள் உடைய தாயின் புகைப்படத்தை பார்க்கிறாள். சில புகைப்படத்தில் அவர்கள் சித்தியும் தன் தாயுடன் இருப்பதை பார்க்கிறாள் அப்போது தான் அவள் தந்தை ஒரு டாக்டர் அவள் சித்தியும் அவருடன் பணியாற்றியது புரிகிறது அவர்களுக்கு. அப்போது தன் தங்கையின் கையை பார்க்கிறாள் அதில் அடிவாங்கிய தடம் இருக்கிறது. அவள் சித்தி கொடுமைபடுத்தியதை அறீந்து அவளிடம் சண்டை இடுகிறாள். சித்தி இரவில் வந்து பயப்பட வைக்கிறார் தங்கையை கொடுமைபடுத்துகிறார் என்று அவர் தந்தையிடமும் முறையிடுகிறாள்.

அடுத்த காட்சியில் சித்தியின் தம்பியும் அவள் மனைவியும் உணவு அருந்த வருகிறார்கள். அப்போது சித்தி தனக்கும் தனது தம்பிக்கும் இடையே சிறுவயதில் நடந்த சம்பவங்களை உரத்த குரலில் சொல்லிக்கொண்டே, சிரிக்கிறாள். ஆனால் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். அவள் தன் தம்பியிடம் ஞாபகம் இருக்கா இந்த விஷயம் எல்லாம் என்று கேட்கிறாள். அவன் இல்லை என்று சொல்கிறான். அப்போது அவள் தம்பியின் மனைவிக்கு மூச்சு அடைக்கிறது. பலத்த அலறலோடு தரையில் விழும் அவள், பயங்கரமாகத் துடிக்க ஆரம்பிக்கிறாள். சிறிது நேரத்தில் ஒரு மாத்திரை போட்டதும் சரி ஆகிறது. காரில் அவன் தம்பியும் அவன் மனைவியும் விட்டிற்கு செல்லும்போது சொல்கிறாள் அந்த விட்டில் அமானுஷ்ய விஷயங்கள் இருப்பதாகவும் அதை அவள் பார்த்ததாகவும் சொல்கிறாள்.

அவள் என்ன விஷயத்தை பார்த்தாள். இந்த விட்டில் என் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது, அந்த பெண் பேய் யார் சித்தியா இல்லை வேற யாரோவா என்று படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…

படம் முழுவதும், ஒருவித பயம் நம்மை ஆட்கொள்கிறது. ஒருவித பயத்துடனே இப்படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியும், வசனமும் மிக முக்கியம். ஒன்னை தவறவிட்டால்கூட படம் நமக்கு புரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது பேய் படங்களில் வெறும் பேயை மட்டும் காட்டி பயப்பட வைப்பது மட்டும் அல்லாமல் அதன் உடன் சேர்த்து படம் முழுக்க ஒரு suspense வைத்து இருக்கிறார் இயக்குனர் அந்த suspense உடையும் இடத்தில எனக்கு எல்லாம் goosebumps (மயிர்கூச்சறிந்து) வந்துவிட்டது.. படத்தின் இறுதிவரை நம்மை ஆச்சர்யத்தில் முழ்க அடிக்கிறார் இயக்குனர். செம த்ரில்லர், horror படம் … இந்த படத்தின் இசை மிக சிறப்பாக உள்ளது. Horror, த்ரில்லர் genre விரும்பும் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Share with:


Newsletter