Yennai Arindhaal Review in Tamil

என்னை அறிந்தால் review in Tamil by Sarath Babu

தல அஜித்தும் கௌதமும் இதற்கு முன்னரே இணைய வேண்டியது காக்க காக்க அசல் படத்துக்கு முன்னர் ஒரு படம் அறிவித்து டிராப் ஆகியது. அதற்கு எல்லாத்துக்கும் சேர்த்து இந்த படத்தில் வட்டியும் முதலுமா ஒரு கிளாஸ்+மாஸ்னா படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.

படத்தின் கதை – சத்யதேவ் (அஜித்) பதிமூன்று வயதில் டாக்டர் ஆக்க வேண்டும் என்று எண்ணுகிறாள் சத்தியதேவின் தாய். ஆனால் சத்யதேவின் தந்தை( Follow ur heart) நீ என்னும் கொஞ்சம் பெருசா ஆனதும் உன் மனசுல என்ன ஆகனும்னு தோணுதோ அது என்ன சொல்லுதோ கேளு என்கிறார் அஜித்தின் தந்தை . அஜித் என்னவாக ஆனார் சத்யதேவின் (அஜித்) Travel தான் என்னை அறிந்தால்…டீசர்ல பார்த்தது போல ஒரு மெலிசான கோடு கோட்டுக்கு இந்த பக்கம் இருந்தா நல்லவன் அந்த பக்கம் போய்டா ரொம்ப கெட்டவன். அஜித் நல்ல பக்கம் இருக்கிறார் அருண் விஜய் கெட்ட பக்கம் இருக்கிறார். வாழ்க்கை அவரை எங்கு கொண்டு செல்கிறது என்று படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

அஜித்தை இத்தனை பரிமாணங்களில் காட்டியதுக்கு கௌதம்க்கு நன்றி.. அஜித் படத்தின் அரம்பத்தில் இருந்து இறுதிவரை அவ்ளோ அழகாக இருக்கிறார். எந்த கெட்அப் போட்டாலும் Manlyஆகா மிக வசீகரமாக இருக்கிறார் ..உனக்கென்ன வேணும் சொல்லு பாட்டில் சான்ஸ் அஹ இல்ல அதுவும் அந்த பாட்டின் இறுதியில் ஒரு வெள்ளை குர்தா ஷார்ட்ஸ் போட்டு வருவர் பாருங்க வாவ் தமிழ் சினிமாவில் screen presenceல பெஸ்ட்ன்னா அது தல தான்…த்ரிஷா,அனுஷ்கா இருவரும் மிக அழகாக நடித்து இருக்கிறார்கள். கெளதம் மேனன்க்கு பெண்கள் மேல இருக்கிற மரியாதை அவர் எடுக்கிற எல்லா படத்திலும் வெளிப்படும் இதிலும் மிக அழகாக வெளிப்பட்டு உள்ளது.. த்ரிஷாவை அஜித் Will u Marry me? என்று கேட்டுவிட்டு பேசும் வசனங்கள் எல்லாம் கிளாசிக் . அந்த மெடிக்கல் ஷாப் வசனம் தியேட்டரே என்ஜாய் செய்தது..த்ரிஷாவின் குழந்தையாக வரும் சுட்டி பெண்,விவேக் என்று அனைவரும் கொடுத்த கதாபத்திரத்தை மிக நன்றாக ஆகா நடித்து இருக்கிறார்கள்

அருண்விஜய்க்கு அவர் வாழ்நாளில் பெஸ்ட் ரோல் இது தான். இதுக்கு அப்புறமும் இப்படி ஒரு படம் அவர்க்கு கிடைக்குமானு தெரியல..அஜித்க்கு அடுத்து இந்த படத்தில் பெரிய ஸ்கோப் அருண்விஜய்க்கு சும்மா பிச்சு உதறி இருக்கார். ஏன்னா நடிப்பு விக்டர்ஆகவே மாறி விட்டார் அருண்..இரண்டாம் பாதியில் அஜித்தை விட ஒரு படி மேல அதிக ஸ்கோப் அருண் விஜய் கேரக்டர்க்கு தான் உள்ளது. தல மட்டும் தான் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கும் சரிசமமாக இல்லை அவரை விட ஒரு படி மேலேயே நடிக்க வாய்ப்பு கொடுக்கிறார்..அஜித் இருக்கும் இடத்தில் வேற எந்த நடிகரும் இந்த அளவுக்கு இடம் தருவார்களா என்பது ஆச்சரியமே. அருண் விஜய்க்கு இந்த படம் மிக பெரிய பிரேக். அருண்விஜய் எல்லாமே இனிமேல் உங்களுக்கு நல்ல தான் நடக்கும் இனிமேல் பட்டாசு போல படமும் அமையும்..

கேமராமேன் டான் மேக் படத்தின் பெரிய பிளஸ் மழை வர போகுதே,உனக்கு என்ன வேணும் சொல்லு போன்ற பாடல்களை அழகாக காட்சி படுத்தி இருக்கிறார். ஹாரிஸ் பாடல்கள் ஏற்கனவே ஹிட் BGMம் சிறப்பாக நறுக்குன்னு போட்டு இருக்கிறார்.பிறகு படத்தின் Costume Designer யாரு? ஒவ்வொரு Costumeum கண்ணிலே நிற்கிறது. …

படத்தில் மைனசே இல்லையான்னு எவனாவது வந்து கமெண்ட்ல கேப்பிங்க ஆமா இருக்கு படம் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக போகும்.அந்த முதல் பாதியில் அஜித்தின் விதவிதமான் கேரக்டர்களும் கெளதமின் காதல் காட்சிகள் என்று அவரின் ஸ்டைலே போகும். இரண்டாம் பாதி சும்மா அதிரும் பிச்சுகின்னு செம ஸ்பீட்அஹ போகும்…அப்புறம் தியேட்டர் சரி இல்ல அதான் பெரிய மைனஸ் நல்ல தியேட்டர்ல திரும்ப படம் பார்க்கணும்…

Verdict – . என்னை அறிந்தால் வேட்டையாடு விளையாடு பாகம்-2 என்றே சொல்லலாம்…அஜித்தின் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும். முக்கியமாக பெண்கள் இப்படத்தை பார்த்தால் இந்த படத்தையும் அஜித்தையும் கொண்டாடுவார்கள்.

Share with:


Newsletter