Antha Vanathai Pola Lyrics | Chinna Gounder | Ilayaraja

Lyrics of Antha Vanatha song from Chinna Gounder (1992) directed by R. V. Udayakumar starring Vijayakanth, Sukanya, Manorama, Goundamani, and Senthil. Music composed and sung by Ilayaraja

அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும்
மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே

மாறிப் போன போதும் இது தேர போகும் வீதி
வாரி வாரித் தூற்றும் இனி யாரு உனக்கு நாதி
பாசம் வைத்த தாலே நீ பயிரைக் காத்த வேலி
பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி
சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம்
உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு

அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே

நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு
துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு
கலங்கும் போது சேறு
அது தெளியும் போது நீரு
கடவுள் போட்ட கோடு
அதைத் திருத்தப் போவதாரு
வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு
அது மன்னவன் பேரு
அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே

[tweetthis]Antha Vanathai Pola Lyrics | Chinna Gounder | Ilayaraja[/tweetthis]

Share with:


Be the first to comment on "Antha Vanathai Pola Lyrics | Chinna Gounder | Ilayaraja"

Leave a comment





Your email address will not be published.




Newsletter