Kaashmora is a good entertainer with a mix of comedy, horror and fantasy 3.5/5

Kaashmora Tamil movie Review

ரவுத்திரம், இதர்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமார இயக்குனரின் படம் என்பதால், இந்த காஷ்மோரா என்ற வித்தியாசமான டைட்டில் மூலம் என்ன சொல்லவருகிறார் என்று ஆவலுடன் தியேட்டர் சென்றேன். கார்த்தி இரு வேறு வேடங்களில் நடக்கிறர் என்றும், படம் பில்லிசூனியம் பற்றிய கதை என்று பத்திரிக்கை முன்னதாகவே தெரிவித்தனர்..

படத்தின் ஆரம்பத்தில் வரும் காஷ்மோர என்ற கேரக்ட்ர் பில்லி சூனியத்தை எடுப்பவராக வருகிறார். அதை எதோ பித்தலாட்டங்கள் பண்ணி பணம் சம்பத்திக்கவே அந்த மாதிரி செய்கிறார். நாட்டில் நடக்கும் பல போலி தனங்களை வெளியில் கொண்டுவர ஸ்ரீ திவ்யா ஆராய்ச்சி பண்றேனு சொல்லி கார்த்தியுடன் சேர்ந்து அவர் பண்ற பித்தாலடங்களை வெளி உலகிற்கு காட்டவே இப்டி செய்கிறார் என்று கார்த்தி(காஷ்மோர) க்கு தெரியாது. கார்த்தியின் அப்பாவாக விவேக் நடித்துள்ளார்.. கார்த்தி தன் அப்பா, அம்மா,பாட்டி,தங்கச்சியுடன் சேர்ந்து பில்லிசூனியம் விரட்டுரேனு சொல்லி காசு பார்க்குராங்க.


அந்த ஊரு மந்திரி ஒரு கொலை கேசீல் சிக்குகிரார். மந்திரி மூடநம்மிக்கையின் மீது நம்பிக்கை உள்ளவர். கூட இருக்கும் சாமியாரால் தன்னை வெளியில் கொண்டு வர முடியாவில்லை என்றதும். காஷ்மோராவின் பெருமையை போலீஸ் வட்டாரங்களே பெருமையாய் சொல்ல. காஷ்மோரவின் உதவியை நாடுகிறார் மந்திரி. அதே சமயம் மந்திரி வீட்டுக்கு ரைடு வர தன் பணம் மற்றும் டாக்குமெண்டுகளை காஷ்மோர வீட்டு அனுப்பி வைக்க அப்பொழுது காஷ்மோரவின் பித்தலாட்டங்கள் தெரியவருகிறது. இந்த கேப்பில் பணத்தையும் டாக்யுமெண்டுகளையும் விவேக் மற்றும் குடும்பத்துடன் எஸ்கேப் ஆயிடுராங்க.

இதற்க்கு இடையில் ஒரு பழைய பங்களவில் பேய்களை ஓட்ட சொல்லி ஒருத்தர் வந்து கூப்டுரார். அந்த பங்களாவில் பித்தலாட்டம் பண்ண போய் காஷ்மோர அங்கு இருக்கும் பேய்களிடம் மாட்டிக்கொண்டு எப்டி தப்பித்தார் என்பதே இந்த படத்தின் கதை. அடுத்த பாதி கதையை தியேட்டர்க்கு போய் பாருங்க.

கார்த்தி, இரண்டுவேடங்களிலும் பக்கவாக நாடித்து இருக்கிறார். ஸ்ரீதிவ்யா, சின்ன கதாபத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து உள்ளார். நயன்தாரா, இரண்டாம் பாதியில் வரும் அவரது கதாபாத்திரம் செம மாஸாக அமைந்துள்ளது.. ருத்தரமாதேவி..அருந்ததி படத்தை போல. விவேக்- தனது எதற்தமான காமெடியில் மக்களை பயத்தில் இருந்து வெளியே கொண்டு வருகிறார்.

மொத்தத்தில் ஹாரர் + காமேடி+ கிரப்பிக்ஸ் வொர்க் எல்லாம் சூப்பர். குடும்பத்துடன் பார்க்கலாம்.

Share with:


About the Author

K Pradeesh
Writer

Be the first to comment on "Kaashmora is a good entertainer with a mix of comedy, horror and fantasy 3.5/5"

Leave a comment





Your email address will not be published.




Newsletter