பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊன் உருக, உயிர் உருக, தேன் தரும் தடாகமே
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க ஆ ..
இடங்கொண்டு விம்மி, இணை கொண்டு இறுகி,
இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு,
இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை
நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
படம்கொண்ட அல்குல் பனி மொழி,
வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே!
பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க…