Saithan (Review)

Saithan Movie Review

Vijay Antony’s Saithan (Review) – There is something unique about Vijay Antony movies and he does it again, hits the right chord again.

இது பூர்வ ஜென்மத்தை பற்றிய கதை னு நெனச்சுட்டு போனவங்களுக்கு பெரிய சஸ்பென்சா இருக்கும். படத்தின் முதல் 10 நிமிடம் யூ டியுப்லயே பார்த்தோம். படத்தின் பெயர் தான் சைத்தான் ஆனால் பேய் படம் இல்ல. ஒரு மனிதனின் முளையில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் போதையினால் வரும் ஒரு விதாமான நிகழ்வுகளை பேய் படம் போன்ற காட்சிகளால் சொல்ராங்க.

விஜய் ஆண்டனி பெயர் (திணேஷ்) சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்ரார். அம்மா மட்டும் தான். அவருக்கு அருந்ததி நாயர் (ஐஸ்வர்யா)ன்ற  அப்பா,அம்மா இல்லாத  பெண்னை மேட்ரிமோனில பார்த்து, பிடிச்சு போய் கல்யாணம் பண்ணி வைக்குராங்க அவுங்க அம்மா. கல்யாணம் ஆகி வாழ்க்கை நல்லா போய்ட்டு இருக்கும் போது, ஒரு நாள் திணேஷ் க்கு எதோ குரல் கேட்குது. அந்த குரல் அவரை தற்கொலை பண்ண சொல்லுது. அந்த குரல் பற்றி அவர் கூட வேலை செய்ர ப்ரண்ட் கிட்ட சொல்ரார். ஒரு நாள் விஜய் ஆண்டனியும், அவர் நண்பனும் கார்ல போய்ட்டு இருக்கும் போது அந்த குரல் கேட்குது.. அதுனால ஆக்சிடென்ட் ஆகுது. அதுல அவர் நண்பர் இருந்து போய்டுரார். அதுக்கு அப்புறம் அவர் வீட்டுல இருக்கும் போதெல்லாம் அந்த கூரல் வந்து நீ செத்து போய்டுனு சொல்லுது.  உடனே ஒரு மனநல டாக்டர்ஐ போய் பார்க்குராங்க. அங்க போய் பார்க்கும் போது விஜய் ஆண்டனி  அவருடைய முன் ஜென்பத்தில்  ஜெயலட்சுமி ன்ற ஒரு பெண்ணால் கொல்லபடுரார். முன் ஜென்மத்தில் என்ன நடந்தது?

A voice inside the head of a software engineer urges him to embark on a quest to find a woman named Jayalakshmi.

அந்த ஜெயலட்சுமி யார்? எதற்காக விஜய் ஆண்டனிய கொல்லாராங்க, இந்த ஜென்மத்துல விஜய் ஆண்டனி ஜெயலட்சுமியை பலி வாங்குனார? இல்லயா? இந்த ஜென்மத்துல ஜெயலட்சுமி என்ன செய்ராங்க? இது தான் சைத்தன் படத்துடைய சஸ்பென்ஸ் கதை.

படத்தில் விஜய் ஆண்டனி வழக்கம் போல அவரோட நடிப்பு இயல்பாக சூப்பார இருக்கு. ஹீரோயின் அருந்ததி நாயர் ஒரு சாயல் ல லட்சுமிமேனுக்கு அக்கா மாதிரி யே இருக்காங்க, அவங்களும் நல்லா நடிச்சு இருக்காங்க. இரண்டு விதமான கதாபத்திரங்களில்..

படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, கதையில் எதிர்பாராத இடங்களில் திருப்புமுனையை வைத்துள்ளார். இது நாவல் தழுவிய கதை என்பதால் வித்தியாசமாக இருந்தது. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்திற்க்கு ஏற்ற மாதிரி அமைத்திருகிறார்.

ஒளிப்பதிவு பிரதீப் கலிபுரா நன்றாக இது வரை பார்த்திடாத காட்சிகளை படத்தில் பார்க்க முடிந்தது. காமெடி இன்னும் கொஞ்சம் வைத்து இருக்கலாம், கிளைமாக்ஸ் இன்னும்  நல்லா பண்ணியிருக்கலாம். ஒரே ஒரு சண்டை காட்சி தான்.

மொத்தத்தில் முன்னர் வந்த, நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற படங்கள் மாதிரி இல்லையென்றாலும்… நீங்கள் எதிர்பார்க்காத கதையாக இந்த படம் இருக்கும்.

Share with:


About the Author

K Pradeesh
Writer

Be the first to comment on "Saithan (Review)"

Leave a comment

Your email address will not be published.