Sindhiya Venmani song lyrics from Poonthotta Kaavalkaaran directed by Senthilnathan starring Vijayakanth, Radhika, Anand, and Vani Viswanath. The music score by Ilaiyaraaja. Sung by K. J. Yesudas, and P. Susheela. Written by Gangai Amaran
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்… (சிந்திய)
பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்
இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்
இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்
மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் ஓடியதே
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே… (சிந்திய)
தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே
காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே
வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
மானுடன் என் மகனே… (சிந்திய)
[tweetthis]Sindhiya Venmani Sippiyil Lyrics | Poonthotta Kavalkaran | Gangai Amaran | Ilayaraja[/tweetthis]
Be the first to comment on "Sindhiya Venmani Sippiyil Lyrics | Poonthotta Kavalkaran | Gangai Amaran | Ilayaraja"