இவ்வுலகின் மண்ணையும் மணிதர்களையும் விட்டு வெகுதூரம் சென்றிருந்தாலும் இன்றும் அவரது வார்த்தைகளின் வழியே நம் உணர்வுகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நா. முத்துக்குமார் அவர்களின் பிறந்தநாளுக்கு ஓர் சிறிய சமர்ப்பணம்.
பற்பல உணர்வுகளை உள்வாங்கி
படைப்பின் உச்சத்தில் பயணித்தாய்…
உன் பயனத்தின் எண்ணக்கூட்டில்
உன்னுடன் பயணித்தவர்கள் பல்லாயிரம்…
உன் எண்ணக்கூட்டில் பறந்த
பட்டாம்பூச்சிகளை விற்பனை செய்தாய்…
அடுத்தவரின் உணர்ச்சிகளுக்கு
உயிரூட்டி சலித்துவிட்டதுபோல்…
உனக்கென ஓர் புது உலகம்
தேடி நிரந்தரமாய் சென்றுவிட்டாய்…
அங்கே அணில்கள் ஆடும் முன்றை
வேடிக்கைப் பார்ப்பவனாய்…
உன் வாழ்க்கை அற்புதமாய்
நகர்ந்து செல்லும் நதிபோல்…
To Download

Be the first to comment on "நா. முத்துக்குமார் அவர்களின் பிறந்தநாளுக்கு ஓர் சிறிய சமர்ப்பணம்."