A Real Life Story Connected To Enai Noki Paayum Thota

Megha Akaash Thotta Movie

நம்ம எல்லாருமே நம்ம வாழ்க்கையில சின்ன சின்ன வேடிக்கையான விஷயங்களை செய்வதுண்டு. அப்படி செய்கிற சில விஷயங்களை சீரியஸாக எடுத்துக்கொள்வதுமுண்டு. அப்படி பட்ட ஒரு சின்ன கணக்ஷன் இல்ல இல்ல, பெரிய கணக்ஷன்தான் அவனுக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்க்கும்.

அப்போது நாங்கள் கல்லூரியின் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் எல்லாம் பிடித்த நடிகர் நடிகையர்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது “நம்ம கெளதம் வாசுதேவ் மேனன் இருக்கார்ல அவர் டைரக்ட் பண்ற படம்லாம் ஒருமாதிரியா. அந்த feel நல்லாருக்கும் அவர் படத்துல இருக்குற சில விஷயங்களாலாம் நம்ம life-ல நடந்தா நல்லாருக்கும்ல” னு ரகு சொல்லிக்கொண்டிருகக்கும்போது நான் குறுக்கிட்டு “டேய், அவனுக்கு GVM படத்துல இருக்குற மாதிரி லவர் வேணும்னு indirect-டா சொல்றான்டா”னு சொன்னேன். இதற்கு பதில் கூறிய ரகு “நான் எல்லாத்தையும்தான் சொன்னேன். இருந்தாலும் அந்த மாதிரி love, lover நம்ம life-ல இருந்தா ரொம்பவே நல்லாருக்கும்ல மச்சா”னு ஒரு புன்னகையோட சொன்னான். இன்னும் அவன் அப்படி சொன்னது அந்த புன்னகை சாயலோட நினைவில் இருக்கிறது.

எப்போதும் போல் கல்லூரி நாட்கள் போய்க்கொண்டிருந்தபோது அவன் அடிக்கடி ஒரு பெண்ணுடன் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதை கண்டுபிடித்தோம் இயல்பாக நண்பர்களுக்குள் கலாய்த்துக்கொள்வது போலவே ரகுவையும் கலாய்த்து தள்ளிவிட்டோம் ஆனாலும் ரகு “இல்லங்கடா அவ என் ஊரு பொண்ணு அதான் சும்மா friendly-யா பேசிட்ருக்க”னு சொல்லி சமாளித்தான். அன்றிரவுதான் கெளதம் வாசுதேவ் மேனனும் தனுஷும் ஒரு படத்தில் இணைவதைபற்றி பேசிக்கொண்டிருந்தோம். படம் பார்க்க போறாம்னு சொல்லிவிட்டு எப்போதும் போல் friendly-யா பேசுகிற பெண்ணிடம் பேச சென்றுவிட்டான். அப்பெண்ணிடம் பேசிவிட்டு வரும்போது யார்கிட்டயும் எதுவும் சொல்லாம போய் உறங்கிவிட்டான், நாங்களும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. சிலநாட்கள் அமைதியாக எதிலும் பெரிது ஈடுபாடற்று இருந்தான் தீடிரென ஒருநாள் காலையில் அவன் அதிகம் பேசாமலிருப்பதையும் கடந்த சில வாரங்களாக அவன் மாறுபட்டிருப்பதையும் கவணித்து “என்னடாச்சுனு” கேட்டேன் அவனிடம்.

அவன் ‘ஒன்னுமில்ல மச்சானு’ சொல்லி பிறகு உண்மையை சொன்னான். “மச்சி! நான் என் ஊர்ப்பொண்ணுக்கிட்ட அப்ப அப்ப பேசுவேன்ல”
“ஆமாடா, என்னடா அந்த பொண்ணுக்கு ஏதும் பிரச்சினையா”
“அப்படிலாம் இல்லாடா, அவள நான் love பண்றேன், எப்பத்துலருந்துனு கேக்காத அது எனக்கே தெரியாது, கொஞ்ச நாளுக்கு முன்னாடி அவக்கிட்ட சொல்லிட்ட அவள நான் love பன்றனு, கேக்கவும் செஞ்ச அவக்கிடட் என்ன கல்யாணம் பண்ணிப்பயானு”
“இதுலாம் எப்படா நடந்துச்சு உன்கூடவேதானடா இருந்த சரி! அவுங்க என்ன சொன்னாங்க உன்கிட்ட”
“இல்லனும் சொல்லல ஆமானும் சொல்லல topic மாத்தி பேச ஆரம்பிச்சுட்டா, எனை காதலிக்கவோ கலாயணம் பண்ணவோ விருப்பம் இல்லையானு கேட்ட, அதுக்கும் பதில் வரல. சரி படங்கல வர மாதிரி மெளனம் சம்மதம்னு எடுத்துக்கவானு கேட்ட, அப்டிலாம் இல்லனு சொன்னா”
“அதுக்கப்றம்”
“இப்பவரைக்கும் எந்த call- உம் வரல, messages-உம் இல்ல. நான் message பண்ணா கூட reply இல்ல, அநேகமா என்ன block பண்ணி வச்சிருக்கானு நினைக்கிறேன்”
“இந்தாடா, என் மொபைலருந்து message or call பண்ணி பாருடா”
“இல்லடா வேணாம்! அவளுக்கு என்மேல விருப்பமில்லனு நினைக்கிறேன் அவள எதுக்கு தொந்தரவு செஞ்சுக்கிட்டு அப்படியே விட்றலாம்”
“அப்போ நீ”
“அடேய் நீ என்னடா? அதுலாம் ஒன்னுமில்ல கொஞ்சம் days la சரியாகிடுவ, காலேஜ் போவோம் டைம் ஆகிடுச்சு” ரெண்டு பேரும் காலேஜ் கிளம்பிட்டோம்.

Megha Akash ENPT Dhanush

எனக்குள்ள ரகுவ பத்தின சிந்தனைகள் வரும் ஆனா அவன்கிட்ட காண்பிப்பது இல்லை அவனும் சில நாட்கள பழைய படி மாறிட்டான் அது உண்மையா இல்லையானு தெரியாது ஆனா அவன் மாறிட்டானு நானும் நம்பினேன், சகஜமா பழையபடி உரையாடல் கலாய்ப்புனு போய்கிட்டு இருந்ததது. சிலநாட்கள் கழித்து எனை நோக்கி பாயும் தோட்டாவின் போஸ்டர் ஒன்று வெளியாகிறது ரீலிஸ் தேதியுடன்.

மீண்டும் நண்பர்களுடன் உரையாடல் தனுஷ் look புதுசா இருக்கு என்றும் மேகா ஆகாஷ் பற்றியும் சில பல உரையாடல்கள். அச்சமயத்தில் தீடிரென ரகுவுக்கு ஒரு call வந்தது. அவன் மொபைலை எடுத்துக்கொண்டு வேகமாக நகர்ந்ததை நான் கவணித்தேன். பின்பு ஒருமணி நேரம் கழித்துதான் அறைக்குள் வந்தான். சிறிது நேரம் அறைக்குள் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தான் பின்பு எனை அழைத்து “மச்சி ! என்ன நடந்ததுனு தெரியுமானு” கேட்டான். நான் நீ சொன்னாதான்டா தெரியும்னு சொன்னேன் அதற்கு ரகு “என்னடா நீ waste, waste “னு சிரிச்சுக்கிட்டே எனை பார்த்து கூறினான். பின்பு அவனே “மச்சி அவ call பண்ணாடா, இன்னொன்னு தெரியுமா அவ என்ன காதலிக்கிறாளாம்” அப்படினு ஒரு துள்ளல் நிலையோடவே என்கிட்ட சொன்னான். என்னடா மச்சி சொல்றனு ரகுவ பார்த்து சிரிச்சிக்கிட்டு மட்டும்தான் இருந்தேன். ஆச்சரியத்துடன் இன்பம் கலந்த புன்னகைதான் அது.

என் வாயை வைத்துக்கொண்டு நான் அமைதியாக இல்லாமல் சில நாள்கள் கழித்து நண்பர்கள் சிலரிடம் ரகு committed ஆன செய்தியை சொல்ல, அவர்களுக்கும் சந்தோஷமும் ஆச்சரியமும் அப்போது நண்பன் ஒருவன் ரகுவை நோக்கி “எனை நோக்கி பாயும் தோட்டா டைட்டில் போஸ்டர் ரீலஸ் ஆன அதே தினத்துலதா உனக்கும் காதல் கிடச்சிருக்கு பார்த்துடா உன் டைரக்டர் படத்துல வரமாதிரியே brakeup ஆகி சேராம போய்டபோறீங்க” னு சொல்லிவிட்டான்.

இதை ரகு ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொண்டான் முதலில் எனக்கு அது அடக்க முடியாத சிரிப்பை தந்தது பின்பு நாட்கள் செல்ல செல்ல அவன் “மச்சி கெளதம் இந்த படத்துல தனுஷையும் மேகாவையும் பிரிச்சிடமாட்டாருல” னு இதை சார்ந்த கேள்விகளை அவ்வபோது கேட்பான்.

இவ்விஷயத்தில் ரகுவிடம் ஒரு சிறுபிள்ளைத்தனமான பைத்தியக்காரத்தனமும் பயமும் கூடவே பெரிய காதலும் இருந்தது நமக்குள்ளும் இவையெல்லாம் இருக்கும் வேறு வேறு காரணங்களுக்காக வேறு வேறு முடிவுகளுக்காக வெவ்வேறு கனவுகளுக்காக நம்மின் காதலுக்காக.

‘மறுவார்த்தை’ பாடல் வெளிவந்த சமயத்திலெல்லாம் breakup song-னு நினைத்து பயந்துவிட்டான். அவ்வப்போது அதை வைத்து நண்பர்களும் கலாய்ப்பார்கள் பலமுறை படம் வெளீயிட்டை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்திருக்கிறோம்.

வருடங்கள் கழித்து இதோ அந்த நாட்கள். எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாகிவிட்டது. நானும் அவனும் வெவ்வேறு ஊர்களில் இருந்துக்கொண்டு ஆனால் ஒரே நேரத்தில் முதல் நாள் முதல் காட்சி படத்தை பார்க்க ஆரம்பித்தோம். அவனை விட எனக்கு ஒரு வித பயம் தனுஷும் மேகாவும் சேரவில்லையென்றால் அதனால் அவன் பாதிக்கப்படுவானா? நிச்சயம் பெரிதாக பாதிப்பு இருக்காது ஆனால் உள்ளுக்குள் சிறிய ஒரு பயம் உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை இருவரும் படத்தின் இறுதியில் சேர்ந்துவிட்டால் அது அவனுக்கு நிச்சயம் பெரிய மகிழ்ச்சியை தரும்.

எனது நோக்கம் முழுக்க படத்தின் இறுதி காட்சிகளை நோக்கிதான் இருந்தது. படத்தின் இறுதிக்காட்சியும் வந்தது கூடவே ஆனந்தமும் ‘சத்தமே வராம வெக்கத்தோட சிரிப்போம்ல அந்த சிரிப்பு என் முகத்துல’ என்னால் அதை உணரமுடிந்தது. ஆம்! சிலவகையான திருப்பங்களுடன் சுபமாக முடிந்தது என் நண்பன் ரகுவின் காத்திருப்பு. கெளதம் வாசுதேவ் மேனனின் ரகுவும் லேகாவும் இணைந்துவிட்டார்கள்.

“மச்சி, சேர்ந்துட்டாங்க, ஒன்னாதா இருக்காங்க. GVM எனக்காகவே படம் பண்ணிருக்காரு அந்த ரகுவையும் லேகாவையும் சேர்த்துவைச்சுருக்காரு”னு ரகுவிடம் இருந்து குறுஞ்செய்தி. இந்த ரகுவும், ரகுவின் காதலியும் சின்ன சின்ன சண்டைகளோடு
நல்லாவே இருக்காங்க, ஒன்னா இருக்காங்க, இதுக்கு அப்புறமும் அப்படிதான் இருப்பாங்கனு நம்பிக்கை இருக்கிறது.

ரகுவையும் லேகாவையும் சேர்த்து வைத்தற்கு மட்டுமல்ல உங்களது அனைத்து படங்களுக்காகவும் காதாப்பாத்திர வடிவமைப்புகளுக்காகவும் காக்கியிலிருந்து பறக்கும் தோட்டாக்களுக்காகவும் நீங்கள் காட்சிபடுத்தும் உறவுகளுக்காகவும் இசைக்காகவும் தீராக்காதலுக்காகவும் அவ்வபோது எங்களை திரையில் காட்டுவதற்காகவும் பெண்களை கொண்டாடுவதற்காகவும் அழகியலை அழகாக படைப்பதற்காகவும் நன்றிகள் GVM!

Share with:


About the Author

Surendar Senthilkumar
என்னை நானே தேடிக்கொண்டிருப்பவன்

Be the first to comment on "A Real Life Story Connected To Enai Noki Paayum Thota"

Leave a comment

Your email address will not be published.