April Mayilae Lyrics | Idhayam | Ilayaraja | Kathir

Lyrics of April Mayilae song from Idhayam directed by Kathir. The music was composed by Ilayaraja and lyrics written by Vaali. Song sung by Ilaiyaraaja, Deepan Chakravarthy and SN Surendar was trendsetter.

LYRICS

ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல காஞ்சு போச்சுடா
இந்த ஊரு பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போரு டா
இது தேவையா அட போங்கய்யா ஜூன் ஜுலையா

பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது
கண்ணாமூச்சிகள் நடக்குது நடக்குது
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே

குர்தா மாக்சியும் சல்வார் கமீசும் சுமந்த பெண்களே
எங்கே என்றுதான் இங்கே இன்றுதான் வருந்தும் கண்களே
வீட்டில் நிற்கிற காவல்காரனும் முறைச்சு பார்க்கிறான்
சோளகொல்லையின் பொம்மை போலவே விரச்சு போகிறான்
டிரைவ் இன் ஹோட்டல்-உம் சாந்தோம் பீச்சும் டல்-லாய் தோன்றுதே பாருங்கள்
பன்னீர் பூக்களை பார்க்காதின்று கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள்
நெஞ்சம் தாங்குமா கண்கள் தூங்குமா துன்பம் நீங்குமா

ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல காஞ்சு போச்சுடா
இந்த ஊரு பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போரு டா

காலேஜ் அழகியும் கான்வென்ட் குமரியும் தேட்டர் போகிறார்
டாக்ஸி டிரைவரும் பாத்து பாத்து தான் மீட்டர் போடுவார்
காலை மாலை தான் வேலை பார்ப்பவர் மகிழ்ச்சி கொள்கிறார்
வாலைக்குமரிகள் சாலை கடக்கையில் வாயை பிளக்கிறார்
ஸ்டெல்லா மேரிஸ் உம் குயின் மேரிஸ் உம் தென்றல் வீசிடும் பூந்தோட்டம்
வஞ்சிப் பாவைகள் தோன்றும் போது நெஞ்சம் போடுதே ஆட்டம்
எங்கள் பாடு தான் சக்க போடுதான் படா ஜோரு தான்

ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல காஞ்சு போச்சுடா
இந்த ஊரு பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போரு டா

Share with:


Be the first to comment on "April Mayilae Lyrics | Idhayam | Ilayaraja | Kathir"

Leave a comment

Your email address will not be published.