A Poem on Peranbu – என்ன தவம் செய்தேன் by Thasneem

Peranbu-Sadhana-Mammootty

தாய் தந்தை என்ற உறவுகளோடு குழந்தைப் பருவத்தின் இன்பங்களை அனுபவித்து காதல் காமம் என அனைத்து இன்பங்களையும் சுமந்து செல்லும் இயல்பான ஒரு மனிதனின் வாழ்க்கை எத்தகைய வரம் நிறைந்த வாழ்வு என்பதை உணர மனநலம் குன்றிய ஒரு சிறு பெண் குழந்தையின் வாழ்க்கை எத்தகைய சவால்கள் நிறைந்தது என்பதை எடுத்துறைக்கும் விதம் அமைந்த ராம் அவர்களின் படைப்புகளில் ஒன்றான பேரன்பு விழித்திரைகளை நனைத்து நினைவலைகளில் நீங்காமல் நீந்திக் கொண்டிருக்கும் ஓர் உன்னதப் படைப்பு.

என்ன தவம் செய்தேன்

தாயின் கூக்குரல் இசைக்க உலகம் என்னை வரவேற்க
என்ன தவம் செய்தேன்!
பொக்கிஷமாய் எண்ணி அள்ளி அனைத்து முத்தமிட்ட தந்தைக்காக
என்ன தவம் செய்தேன்!

தவழ்ந்து வீழ்ந்து போதெல்லாம் தாங்கிய இந்த பூமிக்காக
என்ன தவம் செய்தேன்!
தத்தித் தவழ்ந்த மென்நடையில் அழைத்து வந்த காக்கைகளுக்காக
என்ன தவம் செய்தேன்!

வண்ணத் தூரிகையல் அலங்கரித்த வண்ணத்துப்பூச்சியாய் சுற்றியதற்கு
என்ன தவம் செய்தேன்!
துள்ளித் திரிந்த கன்றுகளைத் தழுவி குதித்து ஓடியதற்கு
என்ன தவம் செய்தேன்!

தென்றல் காற்று வருட தேகமெங்கும் சிலிர்த்து நிற்க
என்ன தவம் செய்தேன்!
தாவிக் குதித்த அனிலையும் தாங்கி நின்ற மரக்கிளையையும் காண
என்ன தவம் செய்தேன்!

எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சிட்டு ஒன்று பறந்ததின் சுதந்திரத்தை வியக்க
என்ன தவம் செய்தேன்!
கண்ணீர் களைந்து கவலைகள் மறந்து ஜீவனில் ஒன்றி வளர்ந்ததற்கு
என்ன தவம் செய்தேன்!

சொந்தம் சூழ நின்றாலும் என்னவனுக்காக ஏங்கும் இதயத்திற்காக
என்ன தவம் செய்தேன்!
தூய்மையான கருவறைக் காதலோடு இரு மனங்கள் இனைந்ததற்கு
என்ன தவம் செய்தேன்!

தடைகள் இன்றி என்னவனுடன் காதலையும் கனவுகளையும் சுமந்து செல்ல
என்ன தவம் செய்தேன்!

Share with:


About the Author

Thasneem
நிஜங்களை நிழலாக்கி, கற்பனைகளை கருவாக்கி, திரைவழியே தென்படும், உணர்ச்சிக் கிடங்குகளில் புதைந்த காவியம் நான்!

Be the first to comment on "A Poem on Peranbu – என்ன தவம் செய்தேன் by Thasneem"

Leave a comment

Your email address will not be published.