Thalli Pogathey Lyrics (in Tamil) Achcham Yenbadhu Madamaiyada

Thalli Pogadhey song lyrics

Yetho Vaanilai / Thalli Pogathey Lyrics from Achcham Enbadhu Madamaiyada. This amazing song is composed by AR Rahman. Lyrics: Thamarai

Lyrics

ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே

கண்ணெல்லாம்
நீயேதான்
நிற்கின்றாய்
விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்
இமை மூடிடு என்றேன்

நகரும் நொடிகள்
கசையடிப் போலே
முதுகின் மேலே
விழுவதினாலே
வரி வரிக் கவிதை
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்
எனது

கடல் போல பெரிதாக நீ நின்றாய்
சிறுவன் நான்
சிறு அலை மட்டும் தான்
பார்க்கிறேன், பார்க்கிறேன்
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று

ஓ… ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே
ஓ… நான் மட்டும் தூங்காமல்
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே

கலாபம் போலாடும்
கனவில் வாழ்கின்றனே
கை நீட்டி
உன்னைத் தீண்டவே பார்த்தேன்
ஏன் அதில் தோற்றேன்?
ஏன் முதல் முத்தம்
தர தாமதம் ஆகுது?
தாமரை வேகுது!

ஓ ஒ ஓ…

தள்ளிப் போகாதே
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே
/தள்ளிப் போகாதே
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே

தேகம் தடை இல்லை
என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்
ஆனால் அது பொய் தான்
என நீயும்
அறிவாய் என்கின்றேன்
அருகினில் வா

ஒ ஒ ஓ…

கனவிலே தெரிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம்
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்

கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்

நொடி நொடியாய் நேரம் குறைய
என் காதல் ஆயுள் கறைய
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட

விதியின் சதி விளையாடுதே
எனை விட்டுப் பிரியாதன்பே
எனை விட்டுப் பிரியாதன்பே

ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
அன்பே…

Share with:


Be the first to comment on "Thalli Pogathey Lyrics (in Tamil) Achcham Yenbadhu Madamaiyada"

Leave a comment

Your email address will not be published.